அந்த ஸ்கூலோட முன்னாள் மாணவன்றதோட, ரெண்டு பொம்பள புள்ளைக்கு அப்பாவா – PSBB பள்ளி சர்ச்சை குறித்து அஸ்வின் காட்டம்.

0
114882
aswin
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

Ravichandran Ashwin Birthday Ravichandran Ashwin Family | Ravichandran  Ashwin Family: रविचंद्रन अश्विन की फैमिली के बारे में कितना जानते हैं आप |  Hari Bhoomi

23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : புதுப்பேட்டை வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் – சினேகாவுக்கு பதில் நடிக்க வேண்டியது இந்த பிக் பாஸ் நடிகை தானாம். அவரே சொன்ன வீடியோ.

- Advertisement -

அவர் மீது போஸ்க்கோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே போல மாணவிகளுக்கு ஆபாசமாக நடந்துகொண்டது உண்மை தான் என்றும் ராஜகோபாலன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆசிரியரின் இந்த மோசமான செயல் சமூகவலைதளத்தில் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிரியரின் இந்த செயல்பாட்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், கடந்த இரண்டு தினங்களாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அந்தப் பள்ளியின் பழைய மாணவனாக மட்டும் அல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் என்னால் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. தற்போது ராஜகோபாலன் என்ற ஒரு பெயர் மட்டுமே வெளியாகி உள்ளது. ஆனால் இது போன்று எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டு.ம் இது போன்ற கொடிய செயல்களை செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க கடுமையான சட்டங்கள் தேவை என தனது காட்டமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement