தன்னை பற்றிய வதந்திகளுக்கு நடிகர் மோகன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஓரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார்.
இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். இவர் ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். மேலும், மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய மோகன் ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது என்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இவர் இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஹரா படம்:
இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் கழித்து ஹரா படத்தின் மூலம் மோகன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ’தாதா 87’, ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் ஹரா படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மோகன் பேட்டி:
நாளை இந்த படம் திரையரங்களில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் உடைய புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மோகன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், 90ஸ் காலத்தில் எய்ட்ஸ் நோய் வந்து நான் இறந்துவிட்டேன் என்று எல்லாம் சொன்னார்கள். அந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் என்னுடைய வீட்டிற்கு எல்லாம் வந்திருந்தார்கள். எனக்கு மட்டும் இல்லாமல் என்னுடைய குடும்பத்திற்கும் அது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:
பின் பேட்டி எடுக்க வந்தவர்கள், இது பொய் என்று சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நான், டேய் இது போங்கா இருக்கு. நீங்களே இருக்குன்னு சொல்லுவீங்க, இல்லன்னு நான் சொல்லனுமா என்று கேட்டேன். அப்புறம் என்னுடைய நண்பர்களிடம் இதைப் பற்றி பேசிய போது நான் தான் ட்ரெண்டிங்காக இருந்தேன். உண்மை என்னன்னு எனக்கு தான் தெரியும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு தெரியும். அது உண்மையா இருந்தால் தான் அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும். அதனால் தான் எனக்கு அதை பற்றி எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மோகன் நடிக்கும் படம்:
ஓரு கட்டத்தில் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கு காரணம் எய்ட்ஸ் நோய் தான். இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பெற்றிருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அதைப் பற்றி எந்த ஒரு இடத்திலேயே மோகன் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.