கஜா புயல் நிவாரணம்..!நீண்ட காலத்திற்கு பின்னர் கேமராவின் கண்ணில் சிக்கிய மோகன்..!

0
371
mohan

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் இருவரும் கொடிகட்டி பறந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வசியம் செய்து வைத்திருந்தவர் நடிகர் மோகன். 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

mohan

அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற பெயரெடுத்த மோகன் , அதன் பின்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவரது பாடல்கள் என்றால் அது ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும் என்றே சொல்லலாம்.

ரஜினி கமலுக்கு ஈடாக இருந்த மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒரு நடிகை புரளியை கிளப்பிவிட அதன் பின்னர் மோகனின் சினிமா வாழ்க்கையே அதள பாதாளத்தில் சென்று விட்டது. அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையில் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் போனார்.

mohan

mohan

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் 2008 ஆம் ஆண்டு சுட்ட பழம் என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. சமீப காலமாக மோகன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். மேலும்,மின்சார சீரமைப்பில் ஈடுபட்டிருந்தமின் உழியர்களிடமும் கலந்துரையாடினர்.