தளபதி 66 படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் மைக் மோகன் ? அவரே சொன்ன தகவல் இதோ.

0
518
- Advertisement -

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். அதோடு தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் மோகன். மேலும், இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மோகன் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். அதோடு ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்ட நடிகர் என்று சொல்லலாம். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும்.

இதையும் பாருங்க : சுப்ரமணியபுறம் படம் பாணியில் காதல், டும்கானின் மனைவி இவங்க தான் – ரெண்டு பேரும் இப்போ இப்படி தான் வாழ்க்கைய ஓட்றாங்க.

- Advertisement -

மோகன் படங்கள் தோல்விக்கான காரணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக, தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக, காதல் மன்னனாக வலம் வந்தவர் மோகன். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய மோகன் பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது. அதோடு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் அவர்கள் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

மோகன் நடிக்கும் ஹரா படம்:

இறுதியாக தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் மோகன். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். மேலும், மோகன் நடிக்கும் படத்திற்கு ஹரா என்று பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது மோகனின் ஹரா படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

தளபதி 66 படம் குறித்த தகவல்:

தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இவர்களுடன் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

தளபதி 66 படத்தில் மோகன்:

தற்போது தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் இணையத்தில் பரவலாகி வருகிறது. இது குறித்து மோகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியிருப்பது, விஜய் படத்தில் நான் நடிக்கவில்லை. ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement