தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த மோகன் தற்போது நீண்ட ஆண்டுகளுலு பின்னர் ரீ - என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகன்.

இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.
இதையும் பாருங்க : உடல் எடையை குறைத்ததும் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் மொட்டை மாடி போட்டோ ஷூட் நடத்தியுள்ள காஜல்
18 மணி நேரம் பிஸியாக நடித்த மோகன் :
ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

வதந்தியால் பறிபோன சினிமா :
மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய நடிகர் மோகன் அவர்கள் ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது என்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

13 ஆண்டு கழித்து ரீ - என்ட்ரி :
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 1999 ஆம் அன்புள்ள காதலக்கு என்ற படத்தை இயக்கினர். அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் :
இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’தாதா 87’ ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இருக்கிறது, இந்த படத்திற்கு 'ஹரா' என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





