விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்துள்ள மோகன் – அதற்கு அவர் கூறியுள்ள காரணம். அதுவும் எந்த படத்தில் தெரியுமா ?

0
2221
- Advertisement -

நடிகர் விஜய் படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று இயக்குனரை பிரபல நடிகர் திட்டி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவருக்கு தமிழகத்தில் மட்டும் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஜய் படத்தில் நடிப்பதற்கு பல பேர் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடங்கி பிரபல நடிகர்கள் என பலருமே விஜய் படத்தில் நடிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் விஜயின் மெர்சல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மோகனுக்கு வாய்ப்பு வந்தது.

- Advertisement -

மோகன் குறித்த தகவல்:

இவர் 80, 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக கொடி கட்டி பறந்தவர். மைக் மோகன் என்றுதான் இவரை பலரும் அழைப்பார்கள். இவருடைய படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வெற்றி விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது.

மெர்சல் பட வாய்ப்பு:

பின் ஏதோ சில காரணங்களால் இவர் திரைத்துறையில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது இவர் ஏதோ ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் வெளிவருமா? இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் மைக் மோகனை மெர்சல் பட இயக்குனர் சந்தித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். அதற்கு மைக் மோகன், நான் அந்த காலத்தில் எப்படிப்பட்ட ஹீரோ என்று உங்களுக்கு தெரியாதா? என்னை போய் வில்லனாக நடிக்க கேட்கிறீர்களே என்று கோபப்பட்டு பேசி இயக்குனரை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன் செய்த தவறு:

அதற்கு பிறகு தான் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் கே சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயர்ந்து நிற்கிறார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு வேலை நடிகர் மோகன் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருந்தால் தற்போது அவருடைய திரை பயணமே வேற லெவலில் மாறி இருக்கும்.

மோகன் நிலைமை:

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய வில்லன்களில் இவரும் ஒரு பிரபலமான நடிகராக இருந்திருப்பார். ஆனால், தற்போது வரை அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அதோடு மெர்சலில் மோகன் நடித்து இருந்தால் பல கோடிகளை சம்பாதித்து இருப்பார். ஆனால், தேடி வந்த வாய்ப்பை மோகன் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்லணும்.

Advertisement