பிரபல பாடகரின் ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்ட பாடகி. அதிக டோஸ் மாத்திரையால் மரணம்.

0
1638
soumya-khan
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி பாடகர் மிகா சிங்கின். சமீபத்தில் இவருடைய ஸ்டுடியோவில் வேலை பார்த்த பெண் மேனேஜர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. மும்பையில் அந்தேரி போர் பங்களா பகுதியில் பிரபல பாடகர் மிகா சிங்கிற்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. இதில் பாடகர் மிகா சிங்கின் ஸ்டுடியோ ஒன்றும் உள்ளது . அங்கு தான் பாடகர் மிகா சிங்கின் ஸ்டுடியோவில் மேனேஜராக வேலை செய்தவர் சௌமியா கான். இவருக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது.

-விளம்பரம்-

இந்நிகழ்வு நடந்த அன்று சௌமியா பங்களாவில் ஸ்டூடியோவில் பேச்சு மூச்சின்றி இறந்த நிலையில் கிடந்து உள்ளார். பின் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சௌமியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது சௌமியாவின் உடலை அவருடைய சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு அனுப்பி வைத்தார்கள். இவர் எப்படி இறந்தார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் சரியா செஞ்சிட்டேன். ஆனால், நடிகர்கள். நடிகை டாப்ஸி அறிவுரை.

தற்போது இவர் இறந்ததற்கான விளக்கத்தையும் போலீசார் அளித்து உள்ளார்கள். அதில் கூறியிருப்பது, சௌமியா கான் என்பவருக்கு 30 வயது தான் ஆகிறது. இவருக்கு சமீப காலமாகவே குடும்ப பிரச்சனைகள் அதிகமாக இருந்து உள்ளது. இதில் இவர் மிகவும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு உள்ளார். அதனால் இவர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார்.

-விளம்பரம்-
Mika Singh shared an emotional post on Instagram, remembering his manager.

தூக்க மாத்திரை ஓவர்டோஸ் ஆகி இருந்ததால் இவர் இறந்து உள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் இது தான் உறுதியாகி உள்ளது. இது முழுவதுமாக தற்கொலை முயற்சி தான். இந்த சாவில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. மன அழுத்தத்தின் காரணமாக தான் சௌமியா தற்கொலை செய்துக் கொண்டார் என்பது ஊர்ஜிதமானது என்று போலீசார் கூறினார்.

Advertisement