நான் சரியா செஞ்சிட்டேன். ஆனால், நடிகர்கள். நடிகை டாப்ஸி அறிவுரை.

0
627
tapsee
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை டாப்சி. தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை அடுத்து இவர் ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். தற்போது நடிகை டாப்சி அவர்கள் ஹிந்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த ‘பிங்க்’ என்ற படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக டாப்ஸி மாறினார்.

-விளம்பரம்-
Tapsee

அதனைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி பல படங்களில் கலக்கி வருகிறார். கடந்த வருடம் டாப்சி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவந்த கேம் ஓவர் படமும், இந்தியில் வெளிவந்த மிஷன் மங்கள், சாந்த் கி அங்க் ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது நடிகை டாப்ஸி நடித்து உள்ள படம் “தப்பட்” . இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த படம் திருமண வாழ்க்கையினால் ஆண், பெண்ணை நடத்தும் விதம், அந்த பெண்ணின் மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஹசீன் துல்ருபா, தட்கா ஆகிய இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் டாப்ஸி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, ஆண், பெண் பாலின பேதங்களை சமீப காலமாகத் தான் நான் புரிந்து கொண்டேன். ஒரு தந்தை தன் மகளை வெளியே செல்ல வேண்டாம் என்று தடுத்தாள் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது இருக்கும் காலம் மாறிக் கொண்டு வருகிறது. இரவு எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட வேண்டும். காரணம் ஒரு சில ஆண்களின் வன்மமான எண்ணமும், சுய கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாத காரணங்கள் தான்.

ஆண், பெண் பாலின பேதங்களில் பல விஷயங்கள் இருக்கிறது. அதை தவறு என்று குரல் எழுப்புவதன் மூலம் நாம் அதை மாற்ற முடியாது. அடுத்து வரும் தலைமுறையாவது இந்த மாதிரி பேதங்கள் வேறுபாட்டை உணராமல் இருக்கலாம். ஆண்-பெண் பாலின பேதங்களின்றி உணராமல் இருந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கலாம். அதற்கு அடுத்து வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மக்கள் அதிகமாக நடிகர்களை தான் தெய்வமாக பார்க்கிறார்கள். மேலும், நடிகர்கள் சொல்வதை தான் வேதவாக்காக கேட்கிறார்கள். இந்த சக்தியை நடிகர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய அறிவுரை. நான் சமூக பிரச்சினைகளை பேசிய படி ஒன்றிரண்டு படங்களில் நடித்தேன். அது மக்கள் மத்தியில் நல்ல முறையில் கொண்டு சேர்த்தது. எனவே நடிகை என்ற வகையில் எனக்கு இருக்கும் சக்தியை நான் சரியாக பயன்படுத்துவேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement