முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் விமானத்தில் சக பயணி ஒருவரை சரமாரியாக குத்துவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. உலக அளவில் மிகப் பிரபலமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தவர் மைக் டைசன். இவர் தற்போது ஓய்வு பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர். இவர் ஒரு வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தவர். இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தவர் . தன்னுடைய 16 வயதிலிருந்தே குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு தன்னுடைய இருபது வயதிலேயே WBC என்ற பட்டத்தை வென்றவர்.
அதுமட்டும் இல்லாமல் இவர் WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களை வெற்றி பெற்ற இளைஞராக விளங்கினார். இவரை பலரும் இளம் வெடி, இரும்பு மைக், உலகின் கெட்ட மனிதன் என்ற பட்டப் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள். மேலும், உலகின் தலை சிறந்த 100 குத்துச்சண்டை வீரர்களின் பட்டியலில் மைக் டைசன் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் அவர்கள் விமானத்தில் சக பயணி ஒருவரை சரமாரியாக அடித்துள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் பயணம் செய்த மைக் டைசன்:
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து போர்ட் லாடர்டேல் நகருக்கு நேற்று முன்தினம் இரவு மைக் டைசன் விமானத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மைக் டைசனை அடையாளம் கண்டு கொண்ட சக பயணிகள் பலரும் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். மைக் டைசனும் சளைக்காமல் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். பின் அதே விமானத்தில் இரண்டு நண்பர்களும் வந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் மைக் டைசன் உடன் போட்டோ எடுத்துள்ளார். இன்னொருவர் மைக் டைசனை பார்த்த மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு சந்தோசத்தில் குதிக்க தொடங்கினார்.
மைக் டைசன் செய்த காரியம்:
அவர் என்ன செய்கிறோம் என்று தலைகால் புரியாமல் விமானத்திற்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தார். அப்போது இவர் செய்வதை பார்த்து சக பயணிகளும் வியந்து போனார்கள். அந்த அளவிற்கு அவர் வித்தியாசமாக செய்து கொண்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் செய்கையினால் மைக் டைசனுக்கு எரிச்சல் ஆனது. பின் தொடர்ந்து மைக் டைசன் பின்புறமாக இருந்து கொண்டு அந்த நபர் எரிச்சல் அடைய செய்தார். இருந்தும் மைக் டைசன் அமைதியாக இருக்க சொன்னார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மைக் டைசன் தன் சீட்டிலிருந்து எழுந்து பின்புறமாக இருந்த அந்த நபரின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
பயணி ஒருவரை மைக் டைசன் அடிக்க காரணம்:
வலி பொருக்க முடியாமல் அந்த நபர் கத்தி கூச்சல் போட்டார். பின் விமானத்திற்குள் அவருடைய சத்தத்தைக் கேட்டு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த காட்சிகள் எல்லாம் இன்னொரு நண்பரின் செல்போனில் ரெக்கார்டு ஆகிக்கொண்டிருக்கிறது. இறுதியில் அந்த நபரின் முகத்தில் ரத்தம் வழிந்து உள்ளது. மேலும், இது குறித்து சக பயணிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறி இருப்பது, மைக் டைசனுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தார். அவரை அமைதியாக இருக்கும்படி மைக் டைசன் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த நபர் கேட்கவில்லை.
சக பயணிகள் அளித்த பேட்டி:
இது மைக் டைசனை எரிச்சல் அடைய வைத்தார். பின் ஆத்திரத்தில் மைக் டைசன் அந்த நபரின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், மைக் டைசன் அந்த நபரை அடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் மைக் டைசன் இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாம் என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.