எதோ அவருக்கு நேத்திக்கு கொரோனா வந்து செத்துட்ட மாதிரி சொல்றாங்க, அது தவறு – மீனா கணவரின் இறப்பிற்கான காரணம் குறித்து பேசிய அமைச்சர்.

0
525
meena
- Advertisement -

சமீப காலமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. சமீபத்தில் கூட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமியின் மனைவி கூட கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டார். இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தான் மீனாவின் கணவர் இறந்தார் என்று செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் பிறந்தனர்.

-விளம்பரம்-

நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் இறந்து உள்ள தகவல் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : முல்லை பெரியார் அணைய இடிக்க சொன்ன உங்க படத்தை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பீங்க – ரிப்போர்ட்டர் கேள்விக்கு பிரித்திவிராஜ் சொன்ன பதில்.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றால் அலர்ஜி :

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது. அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது. அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

கடைசி வரை கிடைக்காத உறுப்பு :

இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள். அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

கொரோனா தொற்றால் இறப்பா ? :

ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அவர் கொரோனா தொற்றால் தான் இறந்தார் என்று பலர் கூறி வரும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரின் விளக்கம் :

இதுகுறித்து பேசிய அவர் ‘ஏதோ நேற்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது போல செய்திகளை நான் பார்த்தேன் கடந்த டிசம்பர் மாதமே அவருக்கு நுரையீரலில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது இதனால் அவர் வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பரில் அவர் மருத்துவமனையில் சேர்ந்து 95 நாட்கள் எக்மோ சிகிச்சை பெற்று அவர் சுயநினைவு இல்லாமல் தான் இருந்தார் என்று கூறியுள்ளார் மா.சுப்பிரமணியன்

Advertisement