மலையாள சூப்பர் மேன்- டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘மின்னல் முரளி’ – முழு விமர்சனம் இதோ.

0
979
MinnalMurali
- Advertisement -

இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மின்னல் முரளி. இந்த படத்தில் டோவினோ தாமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மலையாள படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

பொதுவாகவே நமக்கு சூப்பர் ஹீரோ என்றால் அனைவருக்குமே நியாபகத்தில் வருவது கிறிஸ், சக்திமான் மட்டும் தான். அந்த வகையில் இயக்குனர் சூப்பர் ஹீரோ என்ற கான்செப்டில் மின்னல் முரளி படத்தை இயக்கி இருக்கிறார். சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி மலையாளத்தில் உருவாகியுள்ள முதல் படம் மின்னல் முரளி. மாரி 2 படத்தில் வில்லனாக அசத்தியிருந்த டோவினோ தோமஸ் தான் இந்த படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாக கலக்கி இருக்கிறார். படத்தில் டோவினோ டெய்லர் கடை வைத்திருக்கிறார்.

- Advertisement -

அவருடைய காதலி இவரை ஏமாற்றி விடுகிறார். பின் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற முயற்சியில் டோவினோ இருக்கிறார். இன்னொரு பக்கம் தனது சிறுவயது பள்ளித்தோழி கணவனை உதறிவிட்டு மகளுடன் ஊருக்கு வருகிறார். இதனால் அவளுடன் இணைய முடியுமா? என்ற ஏக்கத்துடன் குரு சோமசுந்தரம் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் 700 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நிகழ்வு நிகழ்கிறது. இதனால் மின்னல் இவர்கள் இருவரையும் தாக்கியது.

பின் இருவருடைய உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் இருவருக்கும் சூப்பர் பவர் கிடைக்கிறது. இவர்கள் இதை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள்? என்பது தான் படத்தின் மீதி கதை. தாமஸ் இப்படத்தில் ஒரு புது முயற்சியை எடுத்து இருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஹீரோவாக மாறி மக்களுக்கு உதவி செய்யும் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அசத்தலாக இயக்கியிருக்கிறார். படத்தில் வில்லன், ஹீரோ மோதும் காட்சிகள் அதிகம் இடம் பெறவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

-விளம்பரம்-

படம் முழுக்க முழுக்க பவர் கிடைப்பது, அதனை பரிசோதிப்பது என்றே பாதி படம் செல்கிறது. பின் ஒரு சிறிய கிராமம், அந்த நான்கு தெருவில் ஒரு சூப்பர் ஹீரோ- வில்லன் என்பதை அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்திற்கு இசை, எடிட்டிங் எல்லாம் பக்கபலமாக அமைந்துள்ளது. இருந்தாலும் படத்தினுடைய நேரம், கிராபிக்ஸ் எல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அதுமட்டுமல்ல ஸ்பைடர்மேன் படத்தின் பல காட்சிகள் இப்படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. படம் முழுக்க முழுக்க 90 காலகட்டத்தில் நகர்வதால் அதற்கேற்றவாறு கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் இந்த புதுமுயற்சி பாராட்டுக்குரிய வகை உள்ளது. மேலும், திரைக்கதையின் நேர்த்தியும், அழகான ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் நாடகக் காட்சி, குரு சோமசுந்தரத்தின் காதல் காட்சிகள், இறுதி சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆங்காங்கே வரும் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஆனால், இன்னும் அதற்காக கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.

நிறை :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இந்தப்படம் இயக்குனரின் ஒரு புது முயற்சி என்று சொல்லலாம்.

எந்த ஆர்ப்பாட்டம் ஆரவாரமில்லாமல் எளிமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

குறை :

படத்தில் பவர் கிடைப்பது, அதை சோதிப்பது என்று சொல்வதால் முதல் பாதி சலிப்படைய வைத்திருக்கிறது.

படத்தில் இன்னும் நகைச்சுவை காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் படமாகவும், குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும் அமைந்துள்ளது.

மொத்தத்தில் மின்னல் முரளி– ஒளி தாக்கி இருக்கிறது.

Advertisement