ஆளவந்தான் படத்தில் வந்தது உண்மையில் நீங்க தானா ? முதன் முறையாக மனம் திறந்த மிர்ச்சி சிவா. இதோ வீடியோ.

0
531
mirchi
- Advertisement -

ஆளவந்தான் படத்தில் நடித்தது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் மிர்ச்சி சிவா. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர். சிவா பத்தாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். சிவா என்று சொன்னவுடன் அனைவருக்கும் அவருடைய நடனம் தான் நியாபகத்திற்கு வரும்.

-விளம்பரம்-

இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்னும் படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார்.இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர்.

- Advertisement -

இறுதியாக வெளியான இடியட் :

இதனை தொடர்ந்து சரோஜா என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து சிவா அவர்கள் தமிழ்ப்படம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து படங்களையும் கிண்டல் செய்யும் வகையில் வெளியாகியிருந்தது. சமீபதில் இவர் நடிப்பில் வெளியான ‘இடியட் ‘ திரைப்படமும் இதே ரகத்தில் தான் இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-20.jpg

ஆளவந்தான் படத்தில் மிர்ச்சி சிவா :

இந்நிலையில் நடிகர் சிவா அவர்கள் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்தது. 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆளவந்தான்.இந்த படத்தில் ஒரு சிறு காட்சியில் மட்டும் சிவா நடித்திருந்தார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவிவந்தது.

-விளம்பரம்-

உண்மையில் அது மிர்ச்சி சிவா தானா :

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிர்ச்சி சிவாவா? ஆளவந்தான் படத்தில் நடித்துள்ளாரா! என்று வியப்புடன் கூறிவந்தனர். இதில் மிர்ச்சி சிவா பார்ப்பதற்கு இளம் வயது மாதவன் போல இருக்கிறார் தானே ? ஆனால், உண்மையில் இது மிர்ச்சி சிவா தானா என்பது பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிர்ச்சி சிவாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டு இருந்தது.

அவரே சொன்ன விளக்கம் :

இதுகுறித்து பேசிய அவர், நான் அந்த படத்தில் நடித்தது வீட்டிற்கே தெரியாது. கமல் சாரை எப்படியாவது பார்க்கவேண்டும் நடிக்க வேண்டும் என்று ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை தான். நான் அந்த படத்தில் நடித்ததை யாருக்கும் சொல்லவில்லை நான் நடிகரான பின்னர் தான் பலரும் அதை கண்டுபிடிச்சி சொன்னார்கள். அத போய் நான் என்னனு சொல்றது. சும்மா ஒரு ரிச் பாயா நடித்தேன் அவ்ளோ தான் என்று கூறியுள்ளார் சிவா.

Advertisement