கிச்சனில் அம்மி, மண் சட்டியில் சமையல், பக்தி மயமான பூஜை அறை – தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை வீட்டின் Home Tour வீடியோ.

0
727
durga
- Advertisement -

பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக கடந்த 2021ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபாத்தில் அவரது 70 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாள் குறித்து எல்லோரும் தங்களின் வாழ்த்துக்களை எல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபாத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல் எங்கள் பெருமை” என்ற புகைப்பட கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை முதல்வர் முதற்கொண்டு பலர் பார்வையிட்டார். அவரை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் அவருடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் சமீபாத்தில் பார்வையிட்டனர்.

- Advertisement -

துர்கா ஸ்டாலின் :

தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி துர்கா ஸ்டாலின் அவர்கள் திருமனம் செய்து கொண்டார். துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு ஜெயந்தி, சாருமதி என இரண்டு சகோதரிகளும், ராஜமூர்த்தி என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதற்கு பிறகு வருத்தத்தில் இருந்த துர்கா ஸ்டாலின் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார்.

சமையலறை டூர் வீடியோ :

இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமையலர் பற்றிய டூர் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. துர்கா ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் தற்போதய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவியாக இருந்தும் சில முறை சில சர்ச்சையான வீடியோ பதிவுகளை வெளியிட்டு அவை வைரலாவதுண்டு அதே போல தான் தற்போது அவரது சமையலரை டூர் விடியோவும் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பொதுவாக சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சமையலரை முழுவதும் நவீனமாக இருப்பதுடன் பல வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியின் சமயலறையில் பல பழைய பத்திரங்கள் இருக்கின்றனர். குறிப்பாக அம்மி, உரல் போன்ற சில பழைய உபகாரங்களும் இருக்கின்றன. அதேபோல மண் பானை போன்றவையும் வைத்திருக்கிறார். துர்கா ஸ்டாலின் அவர்களின் மாமனார் மு.கருணாநிதி அவர்களுக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.

மேலும் தான் திருமணமாகி வந்த போது ஸ்டவ் அடுப்புதான் இருந்ததாம், சில சமயங்களில் விறகு அடுப்பில் கூட சமையல் செய்திருக்கிறாராம். மேலும் கொரோன காலங்களில் வீட்டிலேயே பலவிதமான கசாயங்கல் தயார் செய்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி முதலமைச்சர் மனைவியாக இருந்தும் இவ்வளவு எளிமையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement