15 பிரிவுகளில் விண்ணப்பித்த ராஜமௌலி – RRR படத்திற்கு கிடைத்த முதல் ஆஸ்கர். எந்த பிரிவில் தெரியுமா ?

0
428
Oscar
- Advertisement -

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்திற்க்கு கிடைத்து இருக்கும் முதல் ஆஸ்கர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகில் வெளியான பல்வேறு மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுமலையில் எடுக்கப்பட்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்திற்க்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு தற்போது ஆஸ்கர் விருது கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் சாதனையயையும் படைத்து இருந்தது.மேலும், படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

மேலும், இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற செய்ய ராஜமவுலி தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார். அதிலும்,

-விளம்பரம்-

சிறந்த இயக்குநர் (ராஜமௌலி),
சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்),
சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்),
சிறந்த துணை நடிகை (அலியா பாட்),
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை,
சிறந்த பின்னணி இசை,
சிறந்த பாடல்,
சிறந்த ஒளிப்பதிவு,
சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு,
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு,
சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம்,
சிறந்த பாடல் (நாட்டு நாட்டு),
சிறந்த ஆடை வடிவமைப்பு என 15 பிரிவுகளில் விண்ணப்பித்து இருந்தார்.

இதில் ஏதேனும் ஒன்றிலாவது RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர்ஆர்ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார். RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில்

Advertisement