பிரபல நடிகர் நம்பியாரின் மகன் யார் தெரியுமா ? அவர் எப்படி இறந்தார் தெரியுமா ? இதோ அவரின் புகைப்படம்.

0
692
nambiyaar
- Advertisement -

மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகனை பார்த்திருக்கிறீர்களா? தற்போது அவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் நம்பியார். இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பயணித்திருக்கிறார். இவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலும், இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் மிரட்டி இருந்தார். சொல்லப்போனால், தமிழ் திரை உலகில் வில்லன் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நம்பியார் தான். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் நம்பியார். மேலும், இவர் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ என்று சொல்லலாம். இவர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார்.

- Advertisement -

இவர் தீவிர ஐயப்பன் பக்தர். தொடர்ந்து இவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று இருந்தார். பின் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அதுவும் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால் ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே கூறி இருந்தார்கள். இந்நிலையில் நம்பியாரின் மகனுடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது, நடிகர் நம்பியார் அவர்கள் 1946 ஆம் ஆண்டில் தன்னுடைய உறவுக்காரப் பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுகுமாரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் அகில இந்திய ஐயப்ப சேவ சங்க தலைவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும், பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை இவர் வகித்து இருக்கிறார். மேலும், இவர் பாஜக தலைவர் அத்வானி, நடிகையும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதா ஆகியோருடன் நல்ல நட்பு உறவில் இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ராணுவத்தில் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். இவர் மத்திய கருப்பு பூனை பாதுகாப்பு பணியின் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். இவர் தமிழகத்தில் கருப்பு பூனை படையை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement