பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் மோடி தோற்றத்தில் கலந்துகொண்ட நபர் – ரசிகர்களின் ரியாக்ஷன் இதோ.

0
238
Modi
- Advertisement -

பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோடி போலவே இருந்த நபரின் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுது.

மேலும், இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இதில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இவர்களுக்கு இணையாக இந்த விழாவில் கலந்து கொண்ட நபர் ஒருவர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதாவது இந்த விழாவில் இந்திய பிரதமர் மோடி போலவே தோற்றத்தோடு நபர் ஒருவர் கலந்து கொண்டார். அவரை கண்ட அங்கிருந்து ரசிகர்கள் பலரும் ஒரு கணம் இவர் மோடிதானோ என்ற குழப்பத்தில் வாழ்ந்தனர். தற்போது இந்த விழாவில் மோடி தோற்றத்தில் கலந்துகொண்ட நபரின் வீடியோவானது சமூக வலைதளத்தில் வரலாக பரவி வருகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் என்ன இது மோடியின் dope போன்று இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மோடி தோற்றத்தில் வந்த இந்த நபர் oozan என்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், இந்த நிறுவனம் தான் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள SIET திருமண மண்டபத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் SIET மாணவர்கள் மத்தியில் இவர் மோடி ஜி என்று அறியப்பட்டவர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement