தமிழ் நடிகர்களை புறக்கணித்த மோடி.. கடுப்பில் தமிழ் ரசிகர்கள்..

0
2019
modi

தமிழ் நடிகர்களை புறக்கணித்த மோடி.. கடுப்பில் தமிழ் ரசிகர்கள்.. என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து பல பிரபலங்களும் இணையங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.அது 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பிரதமர் ஆனார். தற்போது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிக மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்திய பிரதமராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் தற்போது அதிகமாக இந்தி திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் நிகழ்ச்சிகளில் கூட தமிழர்களை கூப்பிடாடது ரொம்ப வருத்தத்திற்குரிய விஷயம் என்று கூறுகிறார்கள்.

Image result for modi
Image

ஷாருக்கான், அமீர்கான்,கங்கனா உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதோடு பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியானது.இது குறித்து பார்க்கையில் இந்த நிகழ்ச்சி சினிமா நட்சத்திரங்கள் சம்பந்தமான சந்திப்பு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.அது மட்டும் இல்லைங்க தென்னிந்திய சினிமா துறையில் உள்ள பிரபலங்களை முற்றிலுமாக புறக்கணித்து உள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனால் பல பிரபலங்கள் கோபம் அடைந்து உள்ளனர் என்றும் தெரியவந்து உள்ளது.அதோடு தெலுங்கில் மாஸ் ஹீரோவான நடிகர் ராம் சரணின் மனைவி உபஸ்ன அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும், அவர் கூறியது ,இந்தியாவின் உன்னதமான பதவியில் இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம். நீங்கள்இந்திய மக்கள் அனைவரும் பெருமையாக நினைக்கும் பதவியில் இருக்கிறீர்கள். அதோடு நீங்கள் இந்தியாவின் கவுரவத்தையும் ,கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருகிறீர்கள்.இந்நிலையில் நீங்கள் பாலிவுட் நடிகர்களை மட்டும் அழைத்து, தென்னிந்திய சினிமா திரையில் உள்ள பிரபலங்களில் இருந்து ஒருவரை கூட அழைக்கவில்லை. இந்த செயல் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது .ஆனா, நாங்கள் அதை நல்ல விஷயமாக எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார். இதைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்தும், இந்த நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றார்கள்.

Image
Image

அது மட்டும் இல்லைங்க பிரதமர் மோடி எப்பவுமே தமிழை தூக்க வேண்டும் என்ற நோக்கில்தான் பல செயல்களை செய்து வருகிறார்.அது நீட்தேர்வு, ஆன்லைன் முறை பதிவு, இந்தி திணிப்பு என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான். இப்போது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சியில் கூட தமிழ், தெலுங்கு என தென்னிந்திய துறையில் உள்ள பிரபலமான நடிகர்களை கூட அழைக்கவில்லை. இது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.அதோடு நரேந்திர மோடி அவர்கள் பாஜகவின் தலைவர் ஆவார்.

-விளம்பரம்-
Advertisement