அவங்க சொன்னா பாராட்டுவாங்க, நான் சொன்னா திட்டுவாங்க, இங்க யார் சொல்றதுன்னு தான் முக்கியம் – மோகன் ஜி டென்சன்.

0
556
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தான் இவர் இயக்கிய பகாசுரன் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரஸ் மீட்களை வைத்து வருகிறார் மோகன். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற மோகனிடம் ‘ஜாதிக்கு எதிரான படம் வரக்கூடாது என்கிறீர்கள் ஆனால் உங்கள் பணம் வந்தால் அதன் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தப்படுகிறது அதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

bakasuran

இதற்கு பதில் அளித்த மோகன் ‘உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் நான் இந்த படத்தில் என்னவெல்லாம் திணித்து வைத்திருக்கிறேன் நான் எத்தனை முறை எல்லை இல்லை என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறீர்கள். இந்த சமூகத்தில் நடந்த விஷயத்தை நான் படமாக எடுத்தேன். மாம் எடுத்த கதை தான் எனக்கு அப்படி ஒரு அடையாளத்தை கொடுத்தது. நான் ஜாதி பார்ப்பவன் கிடையாது.

-விளம்பரம்-

ஜாதி இருக்கிறதா என்றால் இருக்கிறது இதைத்தானே வெற்றிமாறன் சாரும் கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் பேசியிருந்தார். ஜாதி இருக்கிறது எனக்கு வேண்டாம் என்று அவர் சொல்கிறார். அவர் சினிமாவில் சாதித்து விட்டார் அதனால் அது அவருக்கு தேவைப்படவில்லை. ஆனால், அடித்துட்டில் இருக்கும் மக்களுக்கு முன்னேறி வார் அந்த இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அதைத்தான் நானும் என்னுடைய படத்தின் சொன்னேன்.

நான் சொல்லும் போது என்னை திட்டினார்கள் ஆனால் வெற்றிமாறன் சார் சொன்னாள் பாராட்டுகிறார்கள் இங்கே யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம் இங்கு நான் சொன்னால் திட்டுவார்கள் அவர்கள் சொன்னால் பாராட்டுவார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்’ என்று கூறியுள்ளார்.

Advertisement