விஜய் கண்டிப்பா அரசியலுக்கு வர மாட்டார், அதுக்கு இதான் காரணம் – ஓப்பனாக சொன்ன மோகன் ஜி.

0
377
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது.

-விளம்பரம்-

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவர்கள் மேடையிலேயே நிறைவேற்றி இருந்தார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் விஜய் அரசியலுக்கு வருவதை சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள மோகன் ஜி ‘ ஒரு சினிமாக்காரனாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இதை இருக்கிறார் அந்த இடத்தை விட்டு விட்டு அவர் இன்னொரு இடத்திற்கு செல்ல மாட்டார். அவர் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார் அவர் தேர்ந்தெடுப்பவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்த லியோ வெற்றிவிழாவில் பேசிய விஜய் ‘புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதிக்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி என்றும் கூறி இருந்தார். இதெற்கெல்லாம் தாண்டி இந்த விழாவில் தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.

அதில் 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்,” 2026…2025க்கு அப்புறம் வர்ற வருஷம்.” என பதிலளித்தார். “வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே….” எனக் கேள்வியை கேட்டதற்கு விஜய் ,” 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ.” எனக் கூற மேலும் கேள்வியை தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் தொடர்ந்தார். இறுதியாக ,” கப்பு முக்கியம் பிகிலு” என விஜய் கூற அரங்கமே கரகோஷத்தால் நிரம்பியது.

Advertisement