தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என பல துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். அதே போல இவர் தீவிர காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனாலேயே இவனுக்கும் பி ஜே பி ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சமூக வலைதளத்தில் பனிப்போர் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனால் பல பிரச்சனைகளும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் மாம் சீசன்3″ல் தொகுப்பாளராகவும், சமீபத்தில் கமலஹாசனுடைய பிறந்தநாளில் “ஹாப்பி பர்த்டே கமலஹாசன்” என்ற சிறப்பு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு குஷ்பூ தனது அண்ணன் உயிரருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பூ ‘தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தான் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் குஷ்புவின் அண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து குஷ்பு, “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும்.
அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது” என்று வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று தனது அண்ணணின் பிறந்தநாளில் பதிவு ஒன்றை போட்டுள்ள குஷ்பூ ‘என் வாழ்வில் ஒரு தூய்மையான காற்றாக நீ வந்தாய் என்னை அம்மா என்ற கூப்பிட்ட முதல் ஆள் நீ தான். என் கையைப் பிடித்து நடக்க கற்றுக் கொண்ட நாள் முதல் 30 ஆண்டுகள் என் கையை விடவே இல்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேட்டா என்றும் நீ என் அச்சுவாக இருப்பாய்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.