மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
மோகன் ஜி இயக்கிய படங்கள்:
இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இவர் பகாசுரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் மோகன் ஜி செய்தியாளர்கள் சந்திப்பில், என்னுடைய புதிய படத்துடைய படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
மோகன் ஜி படப்பிடிப்பு:
தீபாவளி பண்டிகைக்கு படத்தினுடைய டைட்டில் வெளியாகும். நானும் ரிச்சர்ட் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண போகிறோம். இந்த படம் எங்களுடைய சக்திக்கு மீறியது. ரொம்ப புதிதாக இருக்கும். இந்தியா முழுவதும் பேசும் படமாக இது கண்டிப்பாக இருக்கும். இந்த படத்தினுடைய நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. விரைவிலேயே அப்டேட் கொடுப்போம். படம் எடுக்கும் அளவுக்கு எங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பெரிய கன்டென்ட் இல்லை. வழக்கமான வாழ்க்கை தான்.
புது படம் அப்டேட்:
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த புது படத்தை எடுக்கிறோம். பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். ஆனால், படம் ஆரம்பிக்க தாமதமானது. அதனால் படம் பண்ண முடியாமல் இருந்தேன். இப்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் பண்ணி விட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன். அதே போல் தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி விவகார பிரச்சினை இருக்கிறது. யாரும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். பெண்களுக்கு இருப்பது போல ஆண்களிடமும் பணம் வாங்கி நடிக்க வைப்பதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள். மலையாளத்தை போல தமிழ் சினிமாவிலும் பிரச்சனை இருப்பது உண்மைதான், இல்லை என்று சொல்வதெல்லாம் பொய். அதை நம்பாதீர்கள்.
விஜய் குறித்து சொன்னது:
மேலும், விஜய்யின் கோட் படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜயகாந்த் சாரை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். அதேபோல நான் நடிகர் சிவாஜி கணேசனை ஏஐ உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விஜய் அரசியலுக்கு வருவது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்கிறாரோ என்ற வருத்தம் இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தி சொல்லாமல் ஓனத்துக்கு வாழ்த்து சொன்னது வருத்தம்தான். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வது வேறு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலையை விடுங்கள். அப்போதுதான் பலரும் வெளிப்படையாக வாழ்த்து தெரிவிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.