திரைப்பட இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டு இருக்கும் மன்னிப்பு வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கல்பதாக இருந்த சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் கட்டணங்கள் தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி அவர்களும் தனது கட்டணத்தை தெரிவித்து இருந்தார்.
மேலும், திருப்பதியில் லட்டு சர்ச்சை குறித்து அவர்அளித்த பேட்டியில், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்ம ரொம்ப புனிதமாக நினைக்கிற ஒரு கோவிலில் பஞ்சாமிர்தத்திலும், ஆண்மை குறைவு ஏற்படுத்துற மாத்திரைகளை கலப்பதாக செவி வழியாக கேள்விப்பட்டேன். பிறகு அந்தச் செய்தி வெளியே வராமல் தடுத்து, தடயம் இல்லாமல் அழித்து விட்டார்கள். எனக்கு கிடைத்த தகவலின்படி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து மோகன் ஜி:
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இது போல் செய்திருப்பதாக சொன்னார்கள். இதுபோல் விஷயங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடக்கலாம். இதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு. இந்த நேரத்தில் இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதம் என்பது ஒரு புனிதமான விஷயம் என்றவாறு பேசியிருந்தார்.
கைது செய்யப்பட்ட மோகன் ஜி:
இப்படி இவர் அளித்த பேட்டி வைரலானதை தொடர்ந்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலை துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அளித்த புகாரின் காரணமாக, மோகன் ஜி கைது செய்யப்பட்டார். அதற்குப்பின் அவர் ஜாமினில் வெளிவந்து, மீண்டும் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குற்றத்தக்கது.
மோகன் ஜி வீடியோ:
இந்நிலையில் தற்போது மோகன் ஜி தனது பேஸ்புக் பக்கத்தில் பழனி பஞ்சாமிர்தம் பற்றிய அவதூறு கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பழனி பஞ்சாமிர்தம் குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தேன். அதில் நான் அவதூறு பரப்புவதாக பழனி அடிவார காவல் நிலையத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்திருந்தாங்க. அதற்காக நான் பெயில் அப்ளை பண்ணி இருந்தேன். அது குறித்த காணொளி தான் இது. வெறுமனே செவி வழி செய்தியாக நான் கேள்விப்பட்டதை உறுதி செய்யாமல் பஞ்சாமிர்தம் குறித்து நான் பேசியிருக்கக் கூடாது.
மன்னிப்பு கேட்ட மோகன் ஜி:
அதனால்தான் என் மீது இந்த வழக்கு போட்டு இருக்கிறார்கள். இனி இந்த மாதிரியான செயல்கள் தொடராது. நான் கூறிய அந்தக் கருத்தால் யார் மனதாவது காயப்பட்டிருந்தாலோ புண்பட்டு இருந்தாலோ அதை அவதூறாக நினைத்திருந்தாலோ என் ஆழ் மனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இதுபோல் செய்திகள் தீர விசாரிக்காமல் தெரிவிக்க மாட்டேன் என இந்தக் காணொளி மூலமாக கூறிக்கொண்டு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன், நன்றி’ என்று கூறியுள்ளார்.