பகா சூரன் படத்திற்கு பின் மோகனை அய்யப்பன் பேட்டி கண்டு இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
Fun-filled 😂 Ayyappan Anna ❤️🔥 https://t.co/SAOUcf239H
— க.மோகன் (@MohanGM1145) February 21, 2023
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் மோகன், ஐயப்பன் பேட்டியில் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் ‘பெண்கள் காப்பாத்துற படத்துல எதுக்கு ஐட்டம் சாங், 60,70 காலத்தில் இருக்கும் சிலர் தான் ‘அந்த காலத்தில் பெண்கள் எல்லாம் குனிஞ்ச தல நிமிர இருப்பாங்க என்றெல்லாம் சொல்வார்கள். அது மாதிரி பிற்போக்கு தனமான கருத்துகளை பேசும் மோகன் ஜி நவீன பூமரா’ என்று மோகனை சரமாரியாக வச்சி செய்துள்ளார். ‘மோகனின் திரௌபதி படம் வெளியான போதே அய்யப்பன் பேட்டியில் கலந்துகொண்டு இருந்தார். அந்த பேட்டியில் ஜெய் பீம் சர்ச்சைகள் குறித்து மோகனிடம் கேட்கப்பட்டது.
மேலும், மோகன் குறித்தும் அவரது படங்கள் குறித்தும் அவருக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் குறித்தும் கிடுக்கிபுடி கேள்விகளை கேட்டார் அய்யப்பன். அதிலும் குறிப்பாக மோகன் இயக்கும் எல்லா படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நபர் அனைத்து காட்சிகளையும் பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக விமர்சனம் செய்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அந்த நபர் மோகனின் குழுவில் இருப்பவர் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
யாரு பா இந்த எடிட்டர் 😂😂😂 pic.twitter.com/tNn9mYDs6k
— Mohan G Kshatriyan (@mohandreamer) November 7, 2021
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த மோகன் அவர் தன்னுடைய தீவிர ரசிகராக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் ஐயப்பன் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பேட்டியில் இருந்து பாதியில் வெளியேறி இருந்தார் மோகன். அந்த வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி இருக்கையில் மீண்டும் அய்யப்பன் பேட்டியில் பங்கேற்ற மோகனை பலரும் இவன் கிட்ட ஏண்டா மறுபடியும் மாட்ன என்று கேலி செய்து வருகின்றனர்.