‘கள்ளக்காதல சொல்லக்கூடாது, அது திருமணம் கடந்த உறவு’ – பல சர்ச்சை வசனகங்களுடன் வெளியான பகாசூரன் ட்ரெய்லர்

0
204
selvaragan
- Advertisement -

மோகனின் அடுத்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-337-1024x768.jpg

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகனின் அடுத்த படம் :

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன்.

This image has an empty alt attribute; its file name is 1-338.jpg

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் :

சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துஇருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. இதைதொடர்ந்து சாணிக்காகிதம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் செல்வராகவன்.

-விளம்பரம்-

மோகன் – செல்வராகவன் :

இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மீது ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன. இந்த படத்தில் நட்டி நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று அறிவித்து இருந்தார் மோகன். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகி இருக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது.

படத்தின் ட்ரைலர் :

மேலும், இந்த படத்திற்கு ‘பகாசூரன்’ என்று தலைப்பை வைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த மோகன் ‘முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது. அடுத்த திரைப்படத்தின் தலைப்பு. திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு வசனத்தில் ” போன்ற சர்ச்சை வசனங்கள் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement