‘உனக்கு தான் தல வெய்ட்டிங்’ – அஜித் குறித்து மோகன் ஜி போட்ட பதிவு. குஷியான அஜித் ரசிகர்கள்.

0
2306
- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கொடுத்திருக்கும் அப்டேட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. தற்போது அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

படம் குறித்த அப்டேட்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. இந்த படத்தின் டைட்டிலைத் தவிர்த்து வேறு எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. மேலும், இந்த படத்திற்காக அஜித் அவர்கள் லண்டனில் வெளிநாட்டு பிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார். இந்த படத்தில் ஒரு புது அஜித்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மோகன் ஜி பதிவு:

மேலும் படத்தினுடைய கதை முழுமையாக தயாரானவுடன் அஜித் படப்பிடிப்பிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் மோகன் ஜி அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. உங்களை திரையில் காண ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் வேணாம், தனியா வாங்க போதும், சீக்கிரம் வாங்க என்றெல்லாம் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

மோகன் ஜி குறித்த தகவல்:

தற்போது இது தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த அப்டேட்டை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் ரிச்சர்ட்டை படம் இயக்க இருக்கிறார்.

Advertisement