ஜாமினில் வெளிவந்த உடன் இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மோகன் ஜி கைதான செய்தி தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் மோகன் ஜி, இந்த பிரச்சனையில் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான். இப்ப கொழுப்பு மாதிரி, யாராவது விஷம் கலந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். மேலும், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்ம ரொம்ப புனிதமாக நினைக்கிற ஒரு கோவிலில் பஞ்சாமிர்தத்திலும், ஆண்மை குறைவு ஏற்படுத்துற மாத்திரைகளை கலப்பதாக செவி வழியாக கேள்விப்பட்டேன்.

பிறகு அந்த செய்தி வெளியே வராமல் தடுத்து, எல்லாத்தையும் தடயம் இல்லாமல் அழித்துவிட்டார்கள். இதுகுறித்து பல பேர் விளக்கம் அளித்து இருந்தாலும், எனக்கு வந்த தகவலின்படி பஞ்சாமிர்தத்தில் கருத்ததடை மாத்திரைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இது போல் செய்திருப்பதாக சொன்னார்கள். இதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு. இந்த நேரத்தில் இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதம் என்பது ஒரு புனிதமான விஷயம் என்று பேசியிருந்தார்.
மோகன் ஜி கைது:
இப்படி இவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜியை கைது செய்யப்பட்டதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தார். அதோடு சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து நேற்று காலை திருச்சி போலீசார் மோகன் ஜியை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்த சர்ச்சை கருத்துக்கள் தான் அவரின் கைதுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதை அடுத்து பல பிரபலங்கள் மோகன் ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம்:
அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, இயக்குனர் மோகன் ஜி கைதான விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து செய்தியை வெளியிட்டுள்ளது. பின் இயக்குனர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மோகன் ஜி, நான் என்னுடைய பிள்ளையை பள்ளிக்கு அனுப்பு வண்டியில் ஏற்றிவிட்டு திரும்பும் போது திடீரென்று ஒரு எட்டு பேர் சீருடைகள் இல்லாமல் வேஷ்டி, லுங்கி அணிந்து வந்து என்னை கைது செய்தார்கள். உடனே நான், உடை மாத்தணும், என்னுடைய வழக்கறிஞருக்கு விவரம் சொல்லணும், என்னுடைய மனைவிக்கு தகவல் சொல்லணும் என்று சொன்னதற்கு கூட கேட்கவில்லை.
View this post on InstagramA post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)
போலீஸ் செய்தது:
எனக்கான ஒரு மனித உரிமையையும் கொடுக்கவில்லை. அவர்கள் என்னை பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் அழைத்து செல்வதாக சொல்லி வண்டியில் வலு கட்டாயமாக ஏற்றினார்கள். ஆனால், அங்கு போகவில்லை. மாலை 5 மணி வரை எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கு போகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை, அவர்களுக்கும் தெரியவில்லை. அதற்கு பின் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு அடிப்படையான மனிதரையும் உரிமையை எனக்கு கொடுக்கவில்லை. திருப்பதியில் நடந்த விஷயத்தை அங்கிருந்த அரசாங்கமே சொன்னது.
மோகன் தெரிவித்த நன்றி:
அந்த மாதிரி தமிழகத்திலும் ஒரு விஷயம் நடப்பதாக ஒரு செய்தி வந்தது என்று தான் நான் சொன்னேன். நான் சொன்ன கருத்தை தவறாக புரிந்து இருக்கிறார்கள். கண்டிப்பாக நான் சட்டத்தை மதிப்பேன். சட்டம் வழியாக நான் சொல்ல வந்ததை நிரூபிப்பேன். என்னுடைய வழக்கு கோர்ட்டில் இருப்பதால் நான் எதையும் வெளிப்படையாக பேச முடியாது. எனக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்த நண்பர்கள்,அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவருக்குமே இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு துணையாக இருக்கும் வழக்கறிஞருக்கும் நன்றி சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






