தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் சமீபத்தில் “பகாசூரன்” என்ற திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது, இப்படத்தில் செல்வராகவன், நட்ராஜ், கே ராஜன், கூல் சுரேஷ் போன்றவர்கள் நடித்திருந்தனர். இடப்பதில் செல்போன்களினால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுக்கப்பட்டதாக மோகன் ஜி “பகாசூரன்”படம் வெளியாவதற்கு முன்னர் பேட்டியில் கூறியிருந்தார்.

பிற்போக்கு கருத்துகள் :

இந்நிலையில் இப்படம் அதிகமான எதிர்மறை கருத்துகளை கூறும் படமாக இருக்கிறது எனவும். பெண்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், பெண்களையே அணைத்து சுமைகளையும் சுமக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெளிநாடு போல சென்னை மக்கள் மாறிவிட்டனர், பிள்ளைகள் ரூமுக்குள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

Advertisement

மோகன் ஜியை விமர்சித்த இயக்குனர் அமீர் :

இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் பேசியிருந்தார். அதில் “பகாசூரன்” இயக்குனர் மோகன் ஜியை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில் இயக்குனர் மோகன் ஜியின் படங்களை அண்ணாமலை, எச் ராஜா போன்றவர்கள் படம் வெளியானவுடன் பார்த்து கருத்து கூறுகின்றனர். அதே ஏன் காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களை பார்த்து கருத்து சொல்லவில்லை. வட மாநிலங்களில் உள்ள ஆரோக்கியமற்ற நிலைமை போல தமிழ் நாட்டையும் மாற்ற பார்க்கிறார் என இயக்குனர் அமீர் மோகன் ஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மோகன் ஜி பதிலடி :

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த விஷயம் குறித்து பேசியிருந்தார். அந்த கூறுகையில் “ஒரு படத்தை தயாரித்து திரைக்கு கொண்டு வருவது என்பது எவ்வளவு கடினம் என்று அவருக்கு தெரியும். படத்தை பற்றி இப்படி அவர் கூறும் போது அது பார்வையாளர்களை பாதிக்கும் படத்திற்கும் இழப்பு. இந்த படத்தை நான் எந்த சர்ச்சைகளும் இல்லாமல் தான் உருவாக்கி இருக்கிறேன். இதனை விமர்சகர்களும் சொல்கின்றனர்.

Advertisement

திரெளபதி படத்தை ராமதாஸிடம் கட்டியதற்கான காரணம் :

இப்படி இருக்க இயக்குனர் அமீர் அப்படி “பகாசூரன்”படத்தை பற்றி பேசியிருக்க கூடாது. ஒருபக்கம் பகாசூரன் படத்தை கலைஞர் டிவிக்கு கொடுத்து விட்டேன் என்று சிலர் கூற, மறுபக்கம் எனக்கு பின்னல் இருந்தது உதவுவது பாஜக என்றும் என்று அமீர் கூறுகிறார். நான் திரெளபதி படத்தை எடுக்கும் போது டாக்டர் ராமதாஸ் மற்றும் எச்.வினோத் ஆதரவாக இருந்தார்கள். அதனால் அந்த படத்தை அவர்களுக்கு காண்பித்தேன். ஆனால் பகாசூரன் திரைப்படம் அனைவருக்கும் பொதுவானது என்பதினால் யாரிடமும் காட்டவில்லை.

Advertisement

ஆதாரங்களை காட்டுங்கள் :

இப்படி இருக்கும் போது எனக்கு பின்னல் அரசியல் கட்சி இருக்கிறது என ஏன் சொல்கிறார்கள். பகாசூரன் படத்தை அதிகமாக பாஜகவினர் பார்ப்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கித்தான் படத்தை எடுக்கிறேன் என்பதை எந்த ஆதாரத்தில் கூறுகின்றனர். இதற்கான ஆத்ரங்களை காட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் கூறியதை திருமப பெறவேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இயக்குனர் அமீர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

Advertisement