பகாசூரன் ஊத்திக்க வாழ்த்துக்கள்,ஊஊஊஊஊ – கேலி செய்தவருக்கு மோகன் நச் பதிலடி.

0
565
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன்

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார். தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை இயக்கி இருக்கிறார்.

பகாசூரன் Vs வாத்தி :

இந்நிலையில், பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநராக இருந்து நடிகரான செல்வராகவனை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.  இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. செல்வராகவன் – தனுஷ் படங்கள் ஒரேநாளில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

மோகன் பதிலடி :

இதனால் எந்தப் படம் வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் ‘பகசுரன் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துக்கள்,ஊஊஊஊஊ’ என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மோகன் ‘நீ உன் குல தெய்வத்தை வேண்டி ஒரு பக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது.. படம் எல்லாருக்கும் பிடிக்கும்.. வெற்றி படமாக அமையும்.. Screenshot எடுத்து வச்சிக்கோ’ என்று கூறியுள்ளார்.

Advertisement