சினிமாவில் இதான் முக்கியம்,அதுக்கு நானே உதாரணம் – விஷால் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி.

0
392
- Advertisement -

சின்ன பட்ஜெட் படங்கள் குறித்து விஷால் கூறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் மோகன் ஜி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் விஷால், சிறு பட்ஜெட் படங்களை எடுத்தால் உங்களுக்குச் சல்லிக்காசுகூட திரும்பக் கிடைக்காது. ஏற்கெனவே, 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றது. தயவு செய்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு வந்துவிடாதீர்கள்.

- Advertisement -

வேறு எதிலாவது முதலீடு செய்யுங்கள் என்று பேசி இருந்தது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இயக்குனர் மோகன் ‘ நிறைய இயக்குனர்களுக்கு நிறைய படங்கள் தவறி போனதாக விஷால் சார் ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அப்படி வாய்ப்பை தவறவிட்ட இயக்குனர்களுக்கு எல்லாம் ஒன்றே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும் என்று நீங்கள் நம்பினால் கண்டிப்பாக உங்கள் படம் நன்றாக இருக்கும் அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன், என்னுடைய திரௌபதி திரைப்படத்தை 75 லட்சத்தில் பண்ணேன் ஆனால் அது 18 கோடி வசூல் செய்தது.அதேபோல ருத்ர தாண்டவம் படத்தை நான்கு கோடியில் எடுத்தோம், அந்த திரைப்படம் தமிழகத்தில் 13 கோடி வசூல் செய்தது. மேலும், இந்த ஆண்டு செல்வராகவன் சாரி வைத்து இயக்கிய பகாசுரன் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இந்த மூன்று படத்திற்கும் நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன்.

-விளம்பரம்-

இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள் தான். இது அனைத்தும் விஷால் சார் சொன்ன அந்த பட்ஜெட்டில் எடுத்த படங்கள் தான். ஆனால், அவர் சொன்னதில் ஒரு நியாயமும் இருக்கிறது. Ott தளங்கள் எல்லாம் நான்கு ஐந்து கோடிகளில் எடுக்கும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சேட்டிலைட் சேனலையோ Ott நிறுவனத்தையோ அணுகி படத்தை வெளியிடுவது தற்போது மிகவும் கடினமான ஒரு விஷயம் தான்.

மக்கள் எந்த படத்தை பார்க்க விரும்புகிறார்களோ அந்த படங்களை மட்டும் தான் ஓட்டியடி நிறுவனங்கள் தேர்வு செய்கின்றனர். எனவே, மக்கள் பார்க்க விரும்பும் படங்களை எடுப்பது நமது கடமை என்ற அர்த்தத்தில் தான் விஷால் சார் சொல்லியிருப்பாரோ என்ற மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் நிறைய தயாரிப்பாளர்கள் அவரது பேச்சைக் கேட்டு பயந்து சென்று இருக்கிறார்கள். என்னுடைய அசிஸ்டன்ட் ஒருவருக்கு கூட அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சினிமா என்பது வெறும் கன்டென்ட் தான்.

சமீபத்தில் மலையாளத்தில் கூட வெறும் பத்து லட்சத்தில் எடுத்த ஒரு திரைப்படம் 13 கோடி வசூல் செய்து கிட்டத்தட்ட 145 விருதுகளை பெற்றிருக்கிறது. சினிமா என்பது ஒரு மேஜிக், அதில் கண்டன்ட் தான் முக்கியம். நூறு இருநூறு கோடி செலவு செய்து எடுத்த படங்களுக்கு கூட என்று மக்கள் என்ன விமர்சனம் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த ஆண்டு ஓடிய குட் நைட், என்னுடைய பகாசுரன், அயோத்தி, இருகப்பற்று போன்ற படங்கள் அனைத்தும் நான்கு கோடியில் எடுக்கப்பட்ட படங்கள் தான். எனவே பட்ஜெட்டிற்கும் படத்தின் வெற்றிக்கும் சம்மந்தமே கிடையாது. மக்களுக்கு என்ன புதுசாக சொல்லப் போகிறீர்கள் அதில் இருக்கும் கன்டென்ட் என்ன என்பதுதான் முக்கியம்’ என்று கூறியுள்ளார்.

Advertisement