Plip Plip சேனலை கைது செய்ய சொன்ன மோகன் – காரணத்தை சொல்லி கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1063
plip
- Advertisement -

யூடுயூப் பப்ஜி பிரபலம் மதன் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து பிலிப் பிலிப் சேனலை சேர்ந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று திரௌபதி இயக்குனர் மோகன் பதிவிட்டுள்ளார். யூடுயூபில் ஆன் லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக பேசியது, சிறுவர்களிடன் பணத்தை ஏமாற்றியது என்று மதன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் எழுந்ததை அடுத்து தலைமறைவாக இருந்த மதனை தருமபுரியில் போலீசார் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். மேலும், அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

மதன் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து யூடுயூபில் ஆபாசமாக பேசும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பலர் வலையுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் யூயூபில் பலரை வச்சி செய்யும் பிலிப் பிலிப் யூடுயூப் சேனலை சேர்ந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று திரௌபதி பட இயக்குனர் மோகன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பதிவிட்டுள்ள மோகன், இந்த Plip Plip அறிவாளிகளை எப்ப கைது பண்ணுவீங்க ஆபீசர்ஸ்.. சினிமா விமர்சனம் என்ற பெயரில் அத்தனை சினிமா கலைஞர்கள்களையும் கேவலமான கெட்ட வார்த்தையால் பேசி இருக்கானுங்க. நல்ல செய்திக்காக காத்துகொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மோகன், பிலிப் பிலிப் சேனல் மீது காண்டாக இருப்பதற்க்கு காரணத்தை நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

பிலிப் பிலிப் யூடுயூயூப் சேனலில் பல படங்களை roast என்ற பெயரில் வச்சி செய்துவிடுவார்கள். அதே போல படங்களையும் விமர்சனம் செய்வார்கள். ஆனால், திரௌபதி படம் வெளியான போது பல நாட்கள் கழித்து தான் அந்த படத்தை விமர்சனம் என்ற பெயரில் வச்சி செய்தனர். இந்த காரணத்தினால் தான் பிலிப் பிலிப் சேனல் மீது மோகன் இப்படி காண்டில் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement