ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் ஹிட் அடைந்தது. மேலும், மற்ற மொழிகளிலும் இந்த படம் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியடைந்தது. இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இந்த படம் வெளியாகி இன்றுடன் (ஆகஸ்ட்28) 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் "தனி ஒருவன்" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மோகன் ராஜா மீண்டும் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் ஜெயம் ரவி தான் காதநாயாகனக நடிக்க உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. மேலும், இந்த படத்தின் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.#3YearsOfThaniOruvan ? pic.twitter.com/P1aCBQxumk
— Mohan Raja (@jayam_mohanraja) August 27, 2018





