தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் பிரபல நடிகர் ‘ஜெயம்’ ரவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘ஜெயம்’. இது தான் இயக்குநராக மோகன் ராஜா தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த படம் மோகன் ராஜாவிற்கும் மட்டுமின்றி ரவிக்கும் ஹீரோவாக இதுவே முதல் படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை சூப்பர் ஹிட்டானது.இதனைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார் மோகன் ராஜா.
அதன் பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் இயக்குநர் மோகன் ராஜா.அது தான் 2011-ஆம் ஆண்டு வெளி வந்த ‘வேலாயுதம்’ திரைப்படம். பின், இன்னொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தினை இயக்கினார் இயக்குநர் மோகன் ராஜா. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது,
திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் மோகன் ராஜா சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம் ‘அப்பா இப்போது KTV-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தனி ஒருவனையும் சேர்த்து நீங்கள் இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த ‘நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி’ என்கிற படங்கள் கடந்த lockdown 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்’ என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.
இந்த lockdown என்கிற கடின நாட்களில், எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கிவிடவேண்டும் என்று நான் ஆகாயத்தில் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில், குரு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து ‘Audience தான் நம்ம கடவுள். அவங்கள திருப்தி பண்ற படங்களை மட்டுமே எடு’ என்கிற மந்திரத்தை தலையில் அன்றே ஏற்றியதே நினைவுக்கு வருகிறது. இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தை பூரிப்போடு பார்த்து கண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான். படங்களில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் மற்றும் ஒளிபரப்பும் அத்தனை ஊடகங்களுக்கும் நன்றி” என்று மோகன் ராஜா தெரிவித்திருக்கிறார்.