பிக் பாஸ் வீட்டில் இவர் புகைபிடிப்பாரா.! ஷாக்கிங் தகவலை சொன்ன மோகன் வைத்யா.!

0
36590
Mohan

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சீசன் தொடங்கி தற்போது உள்ள மூன்றாவது சீசன் வரை போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்கு என்றே தனியாக ஒரு அறை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் கழிவறைக்கு அருகில் இருந்த இந்த ஸ்மோக்கிங் ஏரியாவானது, தற்போது கார்டன் ஏரியாவில் ஒரு குகை போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

mohan-vaidya

முதல் சீசனில் ஓவியா புகை பிடிப்பது மிகவும் சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த சீசனில் யாஷிகா ,வைஷ்ணவி, ஐஸ்வர்யா, மஹத் என்று பலரும் புகைபிடிப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால், இந்த சீசனில் யார் புகைபிடிப்பது என்று சரியாக தெரியவில்லை.

இதையும் பாருங்க : சிங்கப்பெண்ணே பாடலில் வரும் இந்த பெண் யாருனு தெரியுதா பாருங்க .! 

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் இந்த அறைக்குள் அடிக்கடி பெண்கள் தான் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். ஆனால், பெரும் பாலும் ஆண் போட்டியாளர்கள் யாரும் இந்த அறைக்கு செல்வது இல்லை. ஆனால், முதன் முறையாக முகென் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிகிறார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் மோகன் வைத்யா.

mugen

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் வைத்யா, தர்ஷன் மற்றும் முகென் இருவரும் மிகவும் நல்ல பிள்ளைகள். ஒரு முறை நான் முகெனிடம் கொஞ்சம் கோபமாக கத்திவிட்டேன் இதனால் டென்ஷனான அவர், ஸ்மோக்கிங் அறைக்கு சென்று புகைபிடித்து விட்டு பின்னர் மீண்டும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார் என்று கூறியுள்ளார் மோகன் வைத்யா.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த புகைபிடிக்கும் அறை சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழ் நாடு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளது. உலகளவில் குழந்தைகளும் பொதுமக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தனியாக அறையை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு தவறான உதாரணம் ஆகும், மேலும் இது சட்டத்திற்கு விரோதமாகும் என்று குறிப்பிட்டபட்டுள்ளது. மேலும் ,இது குறித்த ஒரு புகார் கடிதத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கும் அதனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement