சிங்கப்பெண்ணே பாடலில் வரும் இந்த பெண் யாருனு தெரியுதா பாருங்க .!

0
3307
varsha
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து ‘சிங்கப்பெண்ணே ‘ என்ற பாடல் நேற்று (ஜூலை 23) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலில் விஜய், நயன்தாரா, இந்துஜா போன்ற பல்வேறு நடிகர்களின் புகைப்படங்களும் வெளியாகின. மேலும், இந்த படத்தில் வர்ஷா போல்லம்பா என்ற இளம் நடிகையும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மலையாள சினிமாவில் இருந்து தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை நஸ்ரியா. தமிழில் பல்வேறு படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு டாட்டா காண்பித்து சென்றுவிட்டார். அவரை தொடர்ந்து அவரது சாயலிலேயே தமிழ் சினிமாவிற்கு கிடைத்தவர் தான் வர்ஷா போல்லம்பா .

இதையும் பாருங்க : லாஸ்லியா கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! நியாயமான காரணம் இது தான்.! 

- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வர்ஷா போல்லம்பா. அதன் பின்னர் தமிழில் வெற்றிவேல், யானும் தீயவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 90 படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் அவரது மாணவியாக நடித்து இருந்தார் வர்ஷா.

அந்தப் படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் கடந்த ஆண்டு வெளியான சீமத்துரை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் தமிழில் இறுதியாக பெட்டிக்கடை என்ற படத்தில் நடித்து இருந்த இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவர் விஜய்யின் கால்பந்தாட்ட அணியில் இருக்கும் ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

நேற்று(ஜூலை 23) படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியாகி இருந்தது அதில் படத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியாகின. அதில் ஒரு பெண் கால்பந்தாட்ட வீராங்கணையின் புகைப்படமும் வெளியாகி இருந்தது. அது தான் தான் என்று நடிகை வர்ஷா போல்லம்பா தெரிவித்துள்ளார்.

Advertisement