பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படத்தில் நடிக்க மறுத்த மோகன் லால் – காரணம் இது தானாம் (என்ன ஒரு நேர்மை)

0
386
Mohanlal
- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் சங்கர் படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் மறுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 5 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு வந்த “திறநோட்டம்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Picture Of Mohan Lal With His Family Goes VIral

மேலும், இவர் தமிழ் மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் நடித்த படம் மரைக்காயர். இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கி அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சுவாரியர், கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் பிரணவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மரைக்காயர் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சங்கர் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க மறுத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான். இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் திகழ்கிறார்.

இயக்குனர் சங்கர் இயக்கும் படம்:

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். அதனை தொடர்ந்து தற்போது வரை இவர் பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார். தற்போது சங்கர் அவர்கள் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார்.

-விளம்பரம்-
Ram Charan to team up with director Shankar- Dinamani

மோகன் லால் நடிக்க மறுத்த காரணம்:

தமன் இசையமைக்கிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் மோகன் லால் நடிக்க மறுத்து உள்ளார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கதை கேட்ட பிறகு நடிகர் மோகன்லால் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Director Shankar Reveals Why He Is Not Doing Low Budget Movies

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்:

ஏனென்றால், படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்க்கும் அரசியல்வாதி கதாபாத்திரம் என்பதால் மோகன் லால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் மூலம் கவனம் பெற்ற எஸ்.ஜே சூர்யாவை வைத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் ஓகே சொன்னதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருந்தாலும் இதற்கான எந்த விதமான அறிவிப்பும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement