நம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..!பிரபல இயக்குனர் காட்டம்..!

0
551
Vijay

தமிழ் நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் ஆகிய அனைவருக்குமே தமிழகத்தை போன்றே கேரளாவிலும் மாபெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய்க்கு தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.

கேரளாவில் ஒரு பகுதியில் உள்ள நகருக்கு இளைய தளபதி நகர் என்று கூட பெயர் வைத்துள்ளனர். விஜய் படங்கள் என்றாலே கேரளாவில் ஒரு தனி வரவேற்பு என்றே கூறலாம். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்து புதுமுக இயக்குனர் விஏ ஷிரிக்குமார் மேனன் இயக்கத்தில் ‘ஒடியான்’ திரைப்படம் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. 
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட  இயக்குனர் ஷிவ்குமார் விஜய் குறித்து கூறிய கருத்தால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இயக்குனர் ஷிவ்குமார் பேசியதாவது, நமது மலையாள படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என்று கூறு. அதை கொண்டாடாமல் விமர்சிக்கிறார்கள்.. ஆனால் விஜய் படத்துக்கு இவ்வளவு வசூல் என்றால் மட்டும் இங்கு  கொண்டாடுகிறார்கள்.  இதை மன நோய் என்றுதான் கூறுவேன்” என்றார்.