மோகன்ராஜா இயக்கத்தில் சிம்பு, மாஸ் கூட்டணி ரெடி

0
1383
simbu

தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் என இரண்டு தரமான படங்களை கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா அடுத்தாக சிம்புவை இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. சிம்பு தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் ஆகிவிட்டார். பொதுவாக சிம்பு என்றால் சர்ச்சை இருந்துகொண்டே தான் இருக்கிறது .

simbu

சமீபத்தில் வெளியான AAA படம் தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்து தற்போது ஓய்ந்துள்ளது. மேலும், சிம்புவிற்கு நடிக்க தற்காலிக தடை விதிக்கும் வண்ணம் ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மணிரத்தினம் படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்தில் அரவிந்தசாமி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

simbu

இந்த படம் முடிந்து வேலைக்காரன் இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு ரொமான்டிக்கான, சிம்புவிற்கு ஏற்ற காதலை மையமாக கொண்டு வரும் படமாக இருக்கும். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.