மலையாள நடிகர் பேசில் ஜோசப் பற்றி பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பேசில் ஜோசப். இவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் ஆரம்பத்தில் குறும்படங்களை தான் இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய குறும்படங்களில் நடித்தும் இருந்தார். பின் இவர் 2012 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தார்.

சினிமா ஆசையால் இவர் அந்த வேலையை விட்டு தான் இயக்குனர் வினித் சீனிவாசன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அவருடன் இருந்து கொண்டே இவர் மற்றொரு ஒரு படத்திலும் உதவி இயக்குனராக பணிந்து கொண்டிருந்தார். அப்படித்தான் இவருக்கு கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிக்க ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படத்தை பேசில் ஜோசப் இயக்கியிருந்தார். அந்த படத்தின் பெயர் குஞ்சிராமாயணம்.
பேசில் ஜோசப் குறித்த தகவல்:
தன்னுடைய குரு வினித் சீனிவாசனை வைத்து தான் இந்த படத்தை பேசில் இயக்கி இருந்தார். சொல்லப்போனால், இவரை நடிக்க ஊக்குவித்ததே அவருடைய நண்பர்கள் தான். ஆனால், இவருக்கு முழுக்க முழுக்க இயக்கத்தின் மீது தான் அதிக ஆர்வம். இருந்தாலுமே இவர் படங்களில் நடித்தும் இயக்கியுமே வந்தார். அந்த வகையில் இவர் நடித்துக் கொண்டே டொவினோ தாமஸை வைத்து கோதா என்ற படத்தை இயக்கி இருந்தார். அடுத்தடுத்து இவர் படங்களில் நடித்துக் கொண்டும் வந்தார். அந்த வகையில் இவர் நடித்த ஜோஜி படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

பேசில் ஜோசப் திரைப்பயணம்:
இதைத் தொடர்ந்து இவர் மஞ்சுமோல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான ஜான் இ மேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் நகைச்சுவை முகபாவனையே இவருடைய டிரேட் மார்க்காகவும் மாறியது. அதற்கு பின் இவர் டோமினோ தாமஸ் வைத்து மின்னல் முரளி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
பேசில் ஜோசப் சூப்பர் ஹிட் படங்கள்:
அது வரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல்து ஜன்வர், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து மாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்தார். பின் கடந்த ஆண்டு வர்ஷங்களுக்கு சேஷம், குருவாயூர் அம்பலநடையில், சூக்ஷமதர்ஷினி போன்ற அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் பிராவின்கூடு ஷாப்பு.

பாலிவுட்டில் பேசில் ஜோசப்:
இந்த படத்தில் காவல் அதிகாரியாக இவர் செய்த ரகளை எல்லாம் நன்றாக இருந்தது. இப்போது மாலிவுட்டின் பேவரைட் நடிகராக பேசில் ஜோசப் திகழ்ந்து கொண்டிருக்கிறார், அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து இவருடைய நடிப்பிலும் படங்கள் உருவாகிறது. இந்த மாத கடைசியில் இவர் நடித்துள்ள பொன்மேன் என்ற படம் வெளியாகயிருக்கிறது. கூடிய விரைவிலேயே பாலிவுட்டிலும் இவர் திரைப்படம் இயக்க இருப்பதாக பேசப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






