தற்போது வளைர்ந்து வரும் நவீன சினிமா உலகில் சினிமாவிற்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘Money Heist ‘ தொடர் உலகளவில் பிரபலமானது.
அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? அந்த கொள்ளை கும்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இதன் கதை.
இதையும் பாருங்க : கில்லி பட விஜய் அம்மாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.
இந்த கதையில் ஆண்கள் கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா,சுவாரஸ் என்று பல இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பெண்கள் கதாபாத்திரத்தில் டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிலையில் தமிழ் ஊடகம் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட money heist இயக்குனரிடம், பெண் கதாபாத்திரத்தின் இந்தியன் வெர்சனில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது.
வீடியோவில் 4:32 நிமிடத்தில் பார்க்கவும்
அதில் அவரிடம் இந்திய நடிகைகளின் புகைப்படங்கள் சிலவும் காண்பிக்கப்பட்டது. அப்போது பதில் அளித்த அலெக்ஸ் ரோட்ரிகோ , நைரோபி கதாபாத்திரத்துக்கு சாய் பல்லவி என்றும், டோக்கியோ கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ரா என்றும், ரேக்யூல் கதாபாத்திரத்திற்கு நயன்தாரா என்றும், மோனிகா கதாபாத்திரத்திற்கு ராஷ்மிகா என்றும் அலிஸா செய்றா (போலீஸ் ஆபிசர்) கதாபாத்திரத்திற்கு திரிஷாவையும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய அலெக்ஸ் ரோட்ரிகோ , ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் இந்தியன் வெர்ஷனில் எந்த இந்திய நடிகர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் அனைவருக்கும் பிடித்த “ப்ரொஃபஸர் கேரக்டர் – விஜய், பெர்லின் கேரக்டர் – ஷாருக்கான், பொகோட்டா கேரக்டர் – அஜித், சுவாரஸ் கேரக்டர் – சூர்யா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.