போக்கிரி விஜய் வசனத்தையும், சிங்கம் சூர்யா வசனத்தையும் பேசி அசத்திய Money Heist பிரபலம்.

0
1128
moneyheist
- Advertisement -

தற்போது வளைர்ந்து வரும் நவீன சினிமா உலகில் சினிமாவிற்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘Money Heist ‘ தொடர் உலகளவில் பிரபலமானது.

-விளம்பரம்-
Mario De La Rosa (Suárez) Wiki - Money Heist

அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? அந்த கொள்ளை கும்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இதன் கதை.

- Advertisement -

இந்த கதையில் ஆண்கள் கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா,சுவாரஸ் என்று பல இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பெண்கள் கதாபாத்திரத்தில் டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிலையில் தமிழ் ஊடகம் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட money heist மரியோ விஜய் மற்றும் சூர்யா வசனத்தை பேசி அசத்தியுள்ளார்.

வீடியோவில் 7:18-ல் சூர்யா வசனம், 11:53-ல் விஜய் வசனம்

money heist-ல் மரியோ ஒரு முரட்டுத்தனமான போலீஸ் என்பதால் அந்த பேட்டியில் பேசிய மரியோ, போக்கிரி படத்தில் விஜய் பேசும், ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா ‘ என்ற வசனத்தையும், சிங்கம் படத்தில் சூர்யா பேசும் ‘ஓங்கி அடிச்ச ஒன்ற டன் வெயிட்டா’ என்ற வசனத்தையும் பேசி அசைத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement