புடவை கட்டிக்கொண்டு தென்னிந்திய மொழியை சரளமாக பேசிய ‘Money Heist’ நடிகை- வைரலாகும் வீடியோ.

0
5498
money
- Advertisement -

தற்போது வளைர்ந்து வரும் நவீன சினிமா உலகில் சினிமாவிற்கு இணையாக ‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘Money Heist ‘ தொடர் உலகளவில் பிரபலமானது.

-விளம்பரம்-

அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? அந்த கொள்ளை கும்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இதன் கதை.

- Advertisement -

இந்த கதையில் ஆண்கள் கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா,சுவாரஸ் என்று பல இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பெண்கள் கதாபாத்திரத்தில் டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிலையில் நைரோபியாக நடித்து வரும்  ஆல்பா ஃபுளோரோ புடவை கட்டிக்கொண்டு தெலுங்கில் பேசிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டிலேயே தெலுங்கு மொழியில் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து உள்ளார்  ஆல்பா ஃபுளோரோ. அந்த சீரியலின் ஒரு காட்சியில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது போன்றும், அப்போது அவர் தெலுங்கில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கும், ஸ்பானிஷ் மொழியில் இருந்து தெலுங்கு மொழிக்கும் மொழி பெயர்த்து பேசி அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement