அனுஷ்கா பெயரில் பண மோசடி – பட ஆசையால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சோகம்.

0
251
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சூப்பர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ஆயிஷா டகியா மற்றும் அனுஷ்கா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம் இதனைத் தொடர்ந்து சுமனின் ‘மகா நந்தி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, விஷ்ணு மஞ்சுவின் ‘அஷ்ட்ரம்’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.

-விளம்பரம்-

அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இரண்டு’. இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருந்தார்.

- Advertisement -

அனுஷ்காவின் திரைப்பயணம் :

‘இரண்டு’ படத்துக்கு பிறகு ‘வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி’ போன்ற வெற்றி படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் தான் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு “பாகமதி” படத்திற்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

அனுஷ்கா பெயரில்பணமோசடி :

இப்படி பட்ட நிலையில் தான் தற்போது சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது இவருடைய 48வது திரைப்படமாகும். இந்நிலையில் தான் அனுஷ்கா ஷெட்டி தொடர்பாக பண மோசடி வழக்கு ஓன்று வந்துள்ளது. அதாவது மேலாளர் யெல்லா ஷெட்டி என்பவர் நடிகை அனுஷ்கவை சந்திக்க வைப்பதக்கவும் அவரை படத்தில் ஒப்பந்தம் செய்து தருவாகவும் கூறி தயாரிப்பாளர் லட்சுமண் சாரி என்பவரிடம் இருந்து ரூபாய் 51 லட்சம் வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் மணி சர்மா என்ற இசையமைப்பாளரிடம் இருந்தும் ரூபாய் 35 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பலமுறை தயாரிப்பாளர் லட்சமண் சாரியை அழைத்து சென்ற யெல்லா ஷெட்டி கடைசி வரையில் அனுஷ்காவை சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்ற பட்டத்தை அறிந்த அவர் பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் யெல்லா ஷெட்டி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

போலீஸில் புகார் :

இதனால் லட்சுமண் சாரி இது தொடர்பாக பஞ்சாரா ஹல்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்ததில் யெல்லா ஷெட்டியை கண்டித்துள்ளார். இருந்தாலும் பணத்தை யெல்லா ஷெட்டி திருப்பி தராத காரணத்தினால் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லட்சுமண் சாரி புகாரளித்ததாக கூறப்படுகிறது.

Advertisement