‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார்.
ஆனால், திட்டமிட்டபடி இந்த படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணமே ரஜினியின் மருமகன் விசாகன் தான் என்று கூறியுள்ளார் நவீன். அந்த படத்தில் விசாகன் நடிக்க, அவரது மாமா சொர்ணா சேதுராமன் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து விசாகன் திடீரென்று விலகி கொண்டுள்ளார். இந்த நிலையில் பணம் கேட்டு விசாகனின் மாமா மிரட்டுவதாகவும், அவர் தான் படத்திற்கு தடை வாங்கி வைத்துள்ளார் என்று நவீன் கூறியிருந்தார்.
இதையும் பாருங்க : வேறு தொலைக்காட்சிக்கு தாவும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.! எந்த சேனல் தெரியுமா.!
நவீனின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார் என்று சொர்ணா சேதுராமன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ட்விட்டரில் இதற்கு விளக்கமளித்துள்ள நவீன், பத்து மாசமா நான் ஸ்கிரிப்ட் எழுதாம ஓப்பியடிச்சதா சுவர்ணாசேதுராமன் சார் சொல்றார். இதுக்கு நான் பதில் சொல்றதவிட, நாலு மணி நேரம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டு ‘இப்படி ஒரு கதைய ஹாலிவுட்ல கூட நான் பாத்ததில்லனு சொன்ன விசாகன் பதில் சொல்றதுதான் சரியா இருக்கும் என்று கூறியுள்ளார்.