நவீன் இயக்கிய தமிழ் படம் மூடர் கூடம். இந்தப் படத்தின் மூலம் தான் நவீன் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெய பிரகாஷ், நவீன், சென்ட்ராயன், ஓவியா, கிருஷ்ணா, பிரபாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாகும். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் அதிகமாக தொலைக்காட்சிகளில் தான் ஒளிபரப்பப்படுகிறது. இந்த படத்தில் வெவ்வேறு காரணத்தினால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட 4 பேர் சமூகத்தின் மீது இருந்த கோபத்தினால் நான்கு பேர் சேர்ந்து திருட பார்க்கிறார்கள். பின் ஒரு பெரிய பணக்கார வீட்டில் நுழைந்து திருட பார்க்கிறார்கள்.
அவர்கள் திருடிய பணத்தை மனிதாபிமான அடிப்படையில் இன்னொருவருக்கு கொடுக்கிறார்கள். பின் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. மேலும், இந்த படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன். இந்த படத்தின் மூலம் இயக்குனர் நவீனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்த படத்தில் இயக்குனர் நவீன் அவர்கள் சென்ட்ராயன் இடம் ஒரு டயலாக் சொல்லி இருப்பார். அது என்னவென்றால், “நீங்க தனியா இருக்கிற ரூம்ல ஒரு பெண்ணை ட்ரெஸ் இல்லாம இருந்தா எனக்கு இது எல்லாம் பழக்கமில்ல தெரியலன்னு விட்டு விடுவீங்களா சென்ட்ராயன்? என்று கேட்டதும் ட்ரை பண்ணுவேன் என்று கூறியிருப்பார். சென்ராயன்.
இதையும் பாருங்க : கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன்’ – விருது விழா மேடையில் கூறிய யோகி பாபு. வைரலாகும் வீடியோ.
இந்த பதிவை ஒருவர் ட்விட்டரில் போட்டு இப்படி எல்லாம் படத்தில் பெண்ணை வைத்து பேசுவது ட்ரை பண்ணுவேன் என்றால் என்ன அர்த்தம் ? கற்பழிப்பதற்கா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நவீன் அவர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதோடு நவீன் கூறியது, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நீங்கள் தவறாக எண்ணத்தில் புரிந்து கொள்ள வேண்டாம். மேலும்,இதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்த படம் வெளியாகி 6 வருடங்களுக்கு மேலாகியும் இந்த படத்தின் டயலாக்கிற்காக நவீன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மூடர் கூடம், அலாவுதீனும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் நவீன் இயக்கும் படம் “அக்னி சிறகுகள்”. இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்து உடன் எடுத்து வருகிறார் இயக்குனர் நவீன். இந்த படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா ஆவார். மேலும், இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் அவர்கள் தான் இசை அமைக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஷாலினி பாண்டே தான் ஒப்பந்தம் ஆனார். பின் சில பிரச்சனைகளால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டார். பிறகு இவருக்கு பதில் தான் நடிகை அக்ஷரா ஹாசன் அக்னிச் சிறகுகள் படத்தில் நடிக்க தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.