மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் குறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் நவீன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

Advertisement

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். பின் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் எனக்கு எரிச்சலை ஊட்டுகிறது. அதில் காட்டுவது புனைவு கிடையாது. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது.

Advertisement

மலையாளிகள் குறித்து ஜெயமோகன் கருத்து:

குடி குடி குடி என்று விழுந்து கிடப்பது, அத்துமீறுவது தவிர வேறு எதிலும் ஆர்வமில்லை. எந்த பொது நாகரிகமும் கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால், அவர்கள் மொழி மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தெனாவெட்டு இருக்கும். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகள் கால் அழுகி இருக்கின்றது. இப்படத்தினை கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தை விமர்சித்தும், மலையாள மொழி மக்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.

Advertisement

நவீன் பதிவு:

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து மூடர்கூடம் நவீன், ‘தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), ‘மலையாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் – கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும் அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.

Advertisement