லாரன்ஸ் ரசிகர்களை முட்டாள்கள் என்று திட்டிய மூடர் கூடம் இயக்குனர்.!

0
320
Larance

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர், திடீர் பதிவு திருமணம் செய்துகொண்டார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்தார் நவீன். அதுவும் சமத்துவ முறைபடி இந்த திருமணத்தை நடத்தி இருந்தார். இந்த நிலையில் லாரன்ஸ் ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார் நவீன்.

- Advertisement -

சமீபத்தில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் லாரன்ஸ் ராசிகள் சிலர் உடலில் கொக்கி மாட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம்செய்துள்ளார். அதனை கண்டித்து நவீன் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement