வடவர் பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது – மூடர் கூடம் நவீன் காட்டம்.

0
477
- Advertisement -

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் அதிகரிப்பு குறித்து பலவிதமான எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு பல பிரபலங்களும் பல சினிமா இயக்குனர்களும் கருத்து குறி வருகின்றன. முன்பாக விஜய் டிவியின் காமெடி கலைஞர் மதுரை முத்து இதற்கு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வடமாநிலத்தவர்கள் திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை கடுமையான ஆயுதங்களின் மூலம் தாக்குவது போன்ற வீடியோவை பார்த்ததாகவும் அதனை பார்த்தவுடன் தனக்கு மிகவும் கோபம் வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் இப்படியே சென்றால் நம் தமிழ் நாட்டு இளைஞர்கள் நடிகர் கட்டவுட்டிற்கு பால் ஊத்துவார்கள். ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வட மாநிலத்தவர் பால் ஊதிவிட்டு போக போகிறார்கள் என்று கூறியிருந்தார். மேலும் தமிழ் நாட்டு இளைஞர்கள் இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் எனவும் மதுரை முத்து அந்த வீடியோவில் தமிழர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து போலீசாரும் இதற்கு பதிலளித்திருந்தனர்.

- Advertisement -

வட மாநிலத்தவர் குறித்து விஜய் ஆண்டனி பதிவு

இதற்கு பிறகு பலர் இந்த விவகாரம் குறித்து பேச தொடங்கினர். அதில் குறிப்பாக இயக்குனர், நடிகர் மற்றும் பாடகரான விஜய் ஆண்டனி இந்த விஷயம் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பதிவிட்டுருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு வரவேற்பு வந்தாலும் மறுபக்கம் கடுமையான எதிர்ப்புகள் நெட்டிசன்கள் தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

பதிலடி கொடுத்த மதுரை முத்து :

இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த கருத்தை பகிர்ந்துள்ள மதுரை முத்து ‘பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும் ஆனால் ஆள நினைக்க கூடாது’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையான இதே நிலையில் தான் தற்போது “மூடர் கூடம்” படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான நவீன் வட மாநிலத்தவர்கள் பற்றிய கருத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நவீன் ட்விட் பதிவு :

அதில் பதிவில் “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை இயக்குனர் நவீன் மீது வைத்து வருகின்றனர்.

தொடர் சர்ச்சையில் சிக்கும் நவீன் :

பொதுவாக சர்ச்சையான கருத்துக்களை கூறி நெட்டிசன்கள் மத்தியில் கலாய் வாங்கும் இயக்குனர் நவீன் சமீபத்தில் கூட இஸ்லாமிய பெண் ஒருவர் விஜய் படத்தை பார்த்து மத நெறி முறைகளை மீறிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார். அந்த பதிவை விமர்சித்த நவீன் “பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் இது முடிவுக்கு வருவதற்கு முன்னரே தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நவீன். .

Advertisement