உலகளவில் மற்றுமோரு சாதனை படைத்த ஏ ஆர் ரகுமான்..!தமிழருக்கு கிடைத்த பெருமை..!

0
47
Arrahman

பிரபலங்களை பொறுத்த வரை அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்னதான் வரவேற்பு இருந்தாலும், அவர்களுக்கு உலக அளவில் புகழை தேடித்தருவது சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் தான்.

A R Rahman

பொதுவாக சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் மேல் நாட்டு பிரபலங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது உலக அளவில் இந்த ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் அதிகம் செல்வாக்கு உள்ள நபர்களின் பட்டியலில் சில இந்திய பிரபலங்களும் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த பட்டியலில் ஏ ஆர் ரஹுமானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ட்விட்டரில் அதிகம் செல்வாக்கு உள்ள நபர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில் முதல் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லைம் பெயின் முதல் இடத்தில் உள்ளார்.

arr

மேலும், இந்த பாட்டியலில் 10 வது இடத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த இசை புயல் ஏ ஆர் ரகுமான் இருப்பது அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது, அதே போல இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள் இவர்கள் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.