பிறப்பால் கோடீஸ்வரி, தந்தைக்கு வந்த அந்த ஒரு நோயால் ஏழ்மை, கைவிட்ட கணவர் மற்றும் மகன் – பிரபல நடிகையின் சோக வாழ்கை.

0
6143
- Advertisement -

தமிழ் சினிமாவில் குரு சிஷியன், வா அருகில் வா, டூயட் 7 ஜி ரெயின்போ காலனி, வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சுதா. இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகாலம் வெள்ளித்திரையில் நடித்த இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சோகமான நிகழ்வுகளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

டைமென்ட் ஸ்பூன் வாழ்க்கை :

அவர் கூறியதாவது `நான் பணக்காரன் வீட்டில் டிமென்ட் ஸ்பூனுடன் தான் பிறந்தேன். பெரியா வீடு அதிக வேலையாட்கள், கார்களுக்கு மூன்று ட்ரைவர்கள் என இருந்த எங்கள் குடும்பம் மிகவும் செழிப்பாக இருந்தது. எங்களுடைய வீட்டில் நன்கு ஆண் குழந்தைகள் அதில் நான் ஒரேயொரு பெண் என்பதினால் செல்லமாக வளர்த்தார்கள். அமிர்தம் என்ற அர்த்தத்தில் தான் எனக்கு சுதா என்ற பெயரை வைத்தனர்.

- Advertisement -

அப்பாவிற்கு புற்றுநோய் :

ஆனால் எங்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாண்டது, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் எங்களுடைய சொத்துக்கள் அனைத்தும் விற்கப்பட்டன. அப்பாவிற்கு புற்றுநோய் என பின்னர் தான் கண்டறிந்தோம். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா கழுத்தில் இருந்த தாலியை வைத்துதான் எங்களுக்கு உணவளித்தார். என்னுடைய அம்மா நாடக கலைஞர் என்பதினால் என்னை நடிப்பு துறைக்கு அழைத்து வந்தார்.

ஒரு கையெழுத்தில் பறிபோன பணம் :

பின்னர் சீனிவாவில் நடிக்க தொடங்கி பணம் வந்த பிறகு எங்களிடம் பணம் இல்லாதபோது பிரிந்த சொந்தம் அனைத்தும் திரும்பி வந்தது. நான் குழந்தயாக இருக்கும் போது பல சோதனைகளை சிரித்த முகத்துடன் அனுபவித்தேன். பணமும் புகழும் வந்த பிறகும் கூட பல மிகப்பெரிய இழப்புகளை நான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் டெல்லியில் ஒரு ஹோட்டலை தொடங்கினேன். அப்போது கையில் இருந்த பணம் அனைத்தும் முடிந்து விட்டது. ஒரே கையெழுத்தில் கையில் இருந்த பணம் முழுவதையும் இழந்து விட்டேன்.

-விளம்பரம்-

கணவன் மற்றும் மகன் பிரிவு :

பின்னர் அதிலிருந்து மீண்ட எனக்கு மற்றொரு பிரச்சனை மகன் உருவில் வந்தது. என்னுடைய ஒரே மகனும் என்னுடைய சண்டை போட்டுகொண்டு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டார். அப்போதில் இருந்து என்னிடம் பேசுவதில்லை என்னுடைய கணவரும் தன்னை வீட்டு நீங்கிய பிறகு தனிமையில் இருப்பதாக கண்ணீர் மல்க கூறினார் நடிகர் சுதா. நடிகை சுதா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement