மௌன ராகம் சீரியல் நடிகை மல்லிகா யார் தெரியுமா? விஜயகாந்த் படத்தில் கூட நடித்துள்ளாரா.

0
26303
mouna
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌன ராகம். இந்த தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர். இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for Chippy actress

- Advertisement -

அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி. இவள் 7 வயது சிறுமி. அவரது அம்மா மற்றும் தாய்மாமனின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். தன் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்கள் ஏற்படுகிறது. தன் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். இறுதியில் சக்தி தன் தந்தை, தாய் உடன் சேர்ந்து வாழ்கிறாரா? கார்த்தி மல்லிகா உடன் வாழ்கிறாரா? காதம்பரி உடன் வாழ்கிறாரா? என பல திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடர் உள்ளது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் சக்தியின் அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சிப்பி ரஞ்சித். இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் 1992ம் ஆண்டு வெளியான ‘தலஸ்ட்னானம்’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

இவர் இதுவரை மலையாள மொழியில் அதிகமான சீரியல்களில் நடித்து உள்ளார். கன்னடத்தில் கூட ரமேஷ் அரவிந்த்- ஷில்பி பிரபலமான ஜோடியாம் போன்ற பல சீரியல்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை சிப்பி ரஞ்சித் அவர்கள் மௌனராகம் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து உள்ளார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

Advertisement